மிஸ். சவுத் அமெரிக்கா : கோடிகளில் விற்பனையான இந்திய வம்சாவளி கோமாதா

Published On:

| By Kumaresan M

பிரேசிலில் நெல்லூர் ரக பசு ஒன்று 40 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இந்த பசு மிஸ்.சவுத் அமெரிக்காவாகவும் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Bos indicus என அறிவியல் பெயர் கொண்ட இந்த பசு நெல்லூர் மற்றும் ஓங்கோல் கால்நடை பாரம்பரியத்தை சேர்ந்தவை. தட்ப வெட்பநிலைக்கு ஏற்பட உடல் நிலையை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட இந்த மாடுகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவை. வறட்சி மற்றும் அதிக வெப்பத்தையும் எளிதாக தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டவை.

இத்தகைய நெல்லூர் ரக பசுக்களை வாங்கி வளர்க்க பிரேசில் நாடு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், விடினா என்ற நெல்லூர் பசு பிரேசிலில் ரொம்பவே பாப்புலர் . அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மிஸ். சவுத் அமெரிக்காவாக இந்த பசு தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் , மினஸ் ஜெரிஸ் என்ற நகரில் நடந்த ஏலத்தில் விடினா பசு, இந்திய மதிப்பில் ரூ.40 கோடிக்கு ஏலம் போனது. இந்த பசு கிட்டத்தட்ட 1,101 கிலோ எடை கொண்டது. உலகிலேயே அதிக விலை கொண்ட பசு என்ற கின்னஸ் சாதனை புத்தகத்திலும் வியட்னா இடம் பிடித்தது.

கடந்த 1868 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இரு நெல்லூர் ரக காளைகள் மற்றும் இரு பசுக்கள் பிரேசிலுக்கு 13 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்துக்கு பிறகு, கொண்டு செல்லப்பட்டன. அப்போதிருந்து, ஓங்கோல் மற்றும் நெல்லூர் ரக மாடுகள் பிரேசில் பண்ணையாளர்களால் ஆர்வமுடன் வளர்க்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share