இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்!

இந்தியா

உக்ரைனிலுள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம், உயர் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பட்டங்களுக்காக இந்திய மாணவர்களும், மாணவியர்களும் அங்கு சென்று, அங்கேயே தங்கி, படித்து, பட்டம் பெறுவது வழக்கம்.

தற்போது உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்துவரும் நிலையில் அங்கேயே தங்கி படித்துக்கொண்டிருக்கும் 3,400 இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல உக்ரைன் மக்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2022 ஆண்டில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் தொடங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

போர் தொடங்கிய சில நாட்களிலேயே, உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க இந்திய அரசாங்கம் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அங்கிருந்து சுமார் 18,000 மாணவர்களும் மாணவியர்களும் இந்தியாவுக்கு அவசரமாக மீட்டு வரப்பட்டனர்.

அவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்தி இங்கு வர வேண்டியிருந்ததால், மருத்துவக் கல்வியில் அவர்களுக்குத் தடைபட்ட கல்வியை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் நம்பினார்கள்.

ஆனால் மருத்துவப் படிப்பில் தேசிய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதல்களின்படி 2021 டிசம்பருக்கு பிறகு வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள், வேறு பல்கலைக்கழகத்துக்கு மாறி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், சுமார் 3,400 மருத்துவ மாணவர்களும் மாணவியர்களும் தடைபெற்ற கல்வியைத் தொடர இந்த வருடம் ஜனவரி மாதம் உக்ரைனுக்கே மீண்டும் சென்று அங்கு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு நடைபெறும் போரினால் மின்சாரம், குடிநீர், உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவை சீரற்று இருக்கிறது.

ஏவுகணைகளாலும் டிரோன் தாக்குதல்களாலும் உயிரிழக்கும் அபாயங்களையும் அவர்கள் எதிர்கொண்டு படித்து வருகின்றனர். இந்த நிலையில் வேறொரு சிக்கலை அவர்கள் அனுபவிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

போரில், இந்தியா ரஷ்யாவுக்கோ, உக்ரைனுக்கோ ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கிறது. ஆனால், உக்ரைனில் வசிக்கும் அந்நாட்டு மக்கள் இந்தியா, ரஷ்யாவுக்கு துணை நிற்பதாக கருதுகின்றனர்.

இது குறித்து பேசியுள்ள உக்ரைனில் தங்கி படிக்கும் மாணவர்கள், “கடந்த இரு மாதங்களாகவே பல கடைக்காரர்கள் இந்தியர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய மறுக்கின்றனர். தங்கும் விடுதிகளில் ஊழியர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

உள்ளூர்வாசிகள் கோபத்துடன் எங்களைத் திரும்பி போக சொல்கின்றனர். விலைவாசி கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது.

நாங்கள் இந்திய அரசாங்கத்துக்கு கடிதங்கள் எழுதுகிறோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை” என்று  வருத்தத்துடன் கூறியுள்ளனர்.

திருப்பதி நவம்பர் மாத தரிசனம்: எந்த தேதியில் எதற்கான டிக்கெட்டை பெறலாம்?

இருதலைக் கொள்ளி எறும்பு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பாசிப்பருப்பு – கேரட் தோசை

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *