நாட்டின் பொருளாதார நிலை: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் விளக்கம்!

Published On:

| By christopher

நாட்டின் பொருளாதாரம், வருகிற நிதியாண்டில் 7 சதவிகித வளர்ச்சி விகிதத்தை எட்டும் எனவும் பணவீக்கம் இலகுவாகும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

சமீப ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட அமைப்புரீதியான மாற்றங்களால் நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும்  பன்னாட்டு அளவிலான நிலவரம், பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தபோதும் பணவீக்கம் வீழ்ச்சியடைவதைக் காட்டுவதாகவும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கெடுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியுள்ளார்.

மேலும், ”வளர்ச்சி மிதமான அளவுக்கு குறையும்போதும் பொருளாதாரம் சீராக இருக்கும் வாய்ப்புகள், சந்தையில் சாதகமான சூழல் ஆகியவை நிலவும். எனினும் புவிசார் மற்றும் காலநிலை அபாயங்கள் நீடிக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.  நாட்டின் நிகர உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.2 சதவிகிதம் அளவுக்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

பியூட்டி டிப்ஸ்: கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்பவரா நீங்கள்?

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : சேமியா பக்கோடா

விடாமுயற்சி, தங்கலான் பட உரிமையைக் கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share