இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஏற்றுமதியைச் செய்யுமென சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனின் அறிக்கையின் படி இந்தியாவின் வாகனத் தொழில் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்திக்கான உலகளாவியதாக மாறும். இதனால் சர்வதேசச் சந்தைகளையும் ஈர்க்கக் கூடும்.
இதை அடைய இந்தியாவின் ஆட்டோ மொபைல் தொழில்துறை முழுதும் நம்பகமான மற்றும் போட்டித் தன்மை கொண்ட உலகளாவிய உற்பத்திக்கான தங்கள் திறன்களை மேம்படுத்த வேண்டும். வாகன மென்பொருள், பொறியியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் பலம், மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள்(ADAS) போன்ற வளர்ந்து வரும் போக்குகளுடன் இணைந்த தீர்வுகளை வழங்குவதன் மூலம் செழித்து வளர முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய வாகன மற்றும் மென்பொருள் சந்தை 2030ஆம் ஆண்டிற்குள் 3 மடங்கு வளர்ச்சியடைந்துவிடுமெனவும், இந்தியாவின் வாகனத் துறையின் உண்மையான திறனைத் திறக்க, அரசாங்கம் உட்பட அனைத்துப் பங்குதாரர்களிடையே ஒரு வலுவான உரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் 2035ஆம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஏற்றுமதிகளை இந்தியா செய்ய முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷிகர் தவானுக்கு விவாகரத்து வழங்கிய டெல்லி நீதிமன்றம்!.