இந்திய மல்யுத்த சம்மேளனம் உயர்மட்ட குழு தேர்தல்களை நடத்த தவறியதால் அதன் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சம்மேளனம் காலவரையின்றி ரத்து செய்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனம் தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. குறிப்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி வீரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்ததால் உயர்மட்ட தேர்தல்கள் நடைபெறவில்லை.
இந்த சூழலில் உயர்மட்ட குழு தேர்தல்களை நடத்த தாமதித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று உலக மல்யுத்த சம்மேளனம் எச்சரித்திருந்தது.
இந்தநிலையில் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சம்மேளனம் ரத்து செய்துள்ளது. இதன்காரணமாக இந்திய மல்யுத்த வீரர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய கொடியுடன் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
செல்வம்
மதுரை உண்ணாவிரதம்: பிடிஆர் ஆப்சென்ட்!
“ஓமந்தூரார் மருத்துவனை தலைமை செயலகமாக மாற்றப்படாது” – மா.சுப்பிரமணியன்