இயற்கை இடர்பாடுகள்… 30 ஆண்டுகளில் இந்தியாவில் இத்தனை ஆயிரம் பேர் உயிரிழப்பா?

Published On:

| By Kumaresan M

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இயற்கை இடர்பாடுகளில் சிக்கி 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. India sixth affected country weather

கடந்த 1993 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடந்த இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்கான, climate Risk Index 2025 வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுக்க 9,400 இயற்கை இடர்பாடுகள் நடந்துள்ளன. 7,65,000 பேர் உயிரிழந்துள்ளனர். 4.1 டிரில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமாகியுள்ளன.

இந்தியாவில் மட்டும் 80 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 180 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. புயல்கள்தான் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. அடுத்து, வெப்ப அலை, வெள்ளம் மூன்றாவதாக அதிக உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

கரீபியன் பகுதியிலுள்ள டொமினிகா தீவுதான் அதிக இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சீனா இருக்கிறது. ஹோண்டுராஸ், மியான்மர், இத்தாலி, இந்தியா, கிரீஸ், ஸ்பெயின் , வானாட்டு, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. India sixth affected country weather

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share