இந்தியா வர கனடா குடிமக்களுக்கு அனுமதி!

இந்தியா

இந்தியாவுக்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு அனுமதி வழங்கும் எலெக்ட்ரானிக் விசா (e-visa) எனப்படும் இணையவழி அனுமதி வழங்கல் முறையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம், கனடாவின் மேற்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி  ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து, இந்தக் கொலையில் இந்திய அரசின் உளவு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்தது.

இதைத் தொடர்ந்து இரு தரப்பு உறவுகள் நலிவடைய தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வர விரும்புபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாவை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்வதாக கூறி, கடந்த செப்டம்பர் 21 அன்று இந்திய அரசாங்கம் ரத்து செய்தது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு அனுமதி வழங்கும் எலெக்ட்ரானிக் விசா (e-visa) எனப்படும் இணையவழி அனுமதி வழங்கல் முறையை இந்தியா மீண்டும்  தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த அனுமதி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சேரி மொழி: குஷ்பூவின் விளக்கமும்… குவியும் கண்டங்களும்!

கிச்சன் கீர்த்தனா: வெஜ் ஜல்ஃப்ரைசி

அனிமல் படத்தின் ரன் டைம் தெரியுமா? செம ஷாக்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *