நிலவில் இந்தியா: சந்திரயான் 3 திட்ட இயக்குநர் சொல்வது என்ன?

இந்தியா

நிலவில் கால் பதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து இந்தியா இடம் பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியா நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நிலவில் கால் பதித்ததும் “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்” என்று சந்திராயன் 3 செய்தி அனுப்பியதாக  இஸ்ரோ தெரிவித்தது.

சந்திரயான் 3 பயணத்தில் நிலவின் தென் துருவத்தில் லேண்டர் இறங்கியது பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் விவரித்து வருகின்றனர்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “சந்திரயான் எக்ஸ்பரிமெண்ட்ஸ் எல்லாம் அடுத்த 14நாட்களில் முடித்துவிடுவோம். இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்க வில்லை. ரஷ்யா தோல்வி அடைந்தது நமக்கு சங்கடம் தான். இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு பணியான ஆதித்யா எல்1, செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறது” என்று கூறியுள்ளார்.

“இது மிகப் பெரிய சாதனை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் 2,3 மணி நேரத்தில் ரோவர் தனது வேலையை தொடங்கும்” என்று சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சாதனையைத் தொடர்ந்து நாசா இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறுகையில், “உங்கள் வெற்றிகரமான சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய 4வது நாடான இந்தியாவுக்கு வாழ்த்துகள். இந்த பணியில் உங்கள் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று வாழ்த்துக் கூறியுள்ளார்.

பிரியா

யாரும் அடையாத சாதனை: இஸ்ரோவிற்கு பிரதமர் வாழ்த்து!

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *