டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலகிலேயே இந்தியா முதலிடம் பெற்றுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
இந்திய மக்களிடையே கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பேமண்ட் (ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதி) அதிகரித்து வருகிறது. சாதாரண தள்ளுவண்டி கடை முதல் நட்சத்திர விடுதி வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பேமண்ட் வசதி வைத்துள்ளனர். இதனால் மக்கள் ரொக்கமாக பணம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இந்தியாவின் டிஜிட்டல் பேமண்ட் வசதி குறித்து பேசும்போது, “உலகிலேயே இந்தியா தான் டிஜிட்டல் பேமண்ட் வசதியில் முதலிடத்தில் உள்ளது.
உலகத்தில் இணைய சேவை கட்டணம் மிக குறைவாக கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதனால் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டில் மட்டும் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மட்டும் 46 சதவிகிதம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
புதுமையான ஆலோசனைகளுடன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பரவலாக்கப்பட்டதால் பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசின் அறிவிப்பில் இந்தியா 89.5 மில்லியன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுடன் முதலிடத்திலும், பிரேசில் 29.2 மில்லியன், சீனா 17.6, தாய்லாந்து 16.5, தென் கொரியா 8 மில்லியன் பணப்பரிவர்த்தனைகளுடன் அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளன.
செல்வம்
பல்டி அடித்த கிரிக்கெட் வீரர்: வைரல் வீடியோ!
‘ஊதியம் கிடையாது’ : பகுதி நேர ஆசிரியர்கள் ஷாக்!