இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், இந்தியாவின் ரத்தின மற்றும் நகை வர்த்தகத்தை கடுமையாக பாதிக்குமென ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிகளாக விளங்குவது டீசல்(5.5 பில்லியன் டாலர்), வைரங்கள் (1.2 ;பில்லியன் டாலர்) ஆகும்.
கடந்த 2021-22 காலத்தில் இந்தியா – இஸ்ரேல் இடையேயான ரத்தின மற்றும் நகை வர்த்தகம் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. பின், 2022-23 காலகட்டங்களில் இந்த வர்த்தகம் 2.4 பில்லியன் டாலர்களாக குறைந்தது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆசியாவில் அதனின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்குதாரரான இந்தியாவிற்கும் இடையேயான வர்த்தகம் மேலும் பாதிப்படையுமென வர்த்தக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
தற்போது நடந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையேயான போர் சூழல் மிகக் குறுகிய காலத்தில் இந்திய ஏற்றுமதியாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
இஸ்ரேலின் மூன்று பெரிய துறைமுகங்களான ஹைஃபாட், அஷ்டோட், ஈலாட் ஆகியவை நடந்துகொண்டிருக்கும் இந்தப் போர் சூழலால் தாக்குதலுக்குள்ளானால், வர்த்தகம் நிச்சயம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இந்தியா – இஸ்ரேல் இடையேயான வணிகப் பொருள் வர்த்தகம், ஈலாட் துறைமுகம் மூலமாகவே பெரும்பாலும் நடைபெறுகிறது. 2022-23 ஆகிய காலகட்டங்களில் சரக்கு மற்றும் சேவைத் துறைகளில் மட்டும் இந்தியா – இஸ்ரேல் இடையேயான வர்த்தகம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கக் கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷா
”நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்”: இஸ்ரேல் பிரதமருடன் பேசிய மோடி
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை… அதிமுகவிற்கு திடீர் பாசம்: முதல்வர் ஸ்டாலின்