2023-ம் ஆண்டில் இந்தியாவில் 1.37 கோடி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 37,700 பாஸ்போர்ட்கள் என்றளவில் இவை அமைந்திருக்கின்றன. கேரளா, மகாராஷ்டிரா, உபி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த எண்ணிக்கையில் பெரும் பங்களிப்பை தந்துள்ளன.
பாஸ்போர்ட் எண்ணிக்கையில் கேரளா முதலிடம் வகிக்கிறது (15.47 லட்சம்). அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா (15.10 லட்சம்), உத்தரப்பிரதேசம் (13.68 லட்சம்), தமிழ்நாடு (11.47 லட்சம்) மற்றும் பஞ்சாப் (11.94 லட்சம்) ஆகியவை வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாடு நான்காவது இடம் பிடித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களில் கிட்டத்தட்ட பாதியை, இந்த ஐந்து மாநிலங்கள் பெற்றுள்ளன.
முன்னதாக 2022-ம் ஆண்டில், நாட்டில் சுமார் 1.17 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், முந்தைய 2021-ம் ஆண்டில் இது சுமார் 73 லட்சமாக இருந்தது. இந்தியாவில் பாஸ்போர்ட் வழங்குவது அதிகரிப்பதற்கு, அவற்றை எளிதாகப் பெறுவது ஒரு காரணம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கிறது.
’பாஸ்போர்ட் சட்டம்-1967’ என்பதன் கீழ், சாதாரண, ராஜதந்திர, அதிகாரப்பூர்வ, அவசர சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றிதழ் என பல வகையிலான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை இந்தியாவில் பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கு தேவையை அதிகரிக்கச் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சம்மர் ஸ்பெஷல் ஹெல்த் டிப்ஸ்: தினமும் இளநீர் பருகுவது ஆபத்தா?
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?
பியூட்டி டிப்ஸ்: அழகான மெஹந்தியைப் பெற இதைச் செய்யுங்க!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!