மாசுபட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு : மிக மோசமான நிலையில் இந்தியா!

இந்தியா

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யூ.ஏர் (IQAir) 2023-ம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் வங்காளதேசம் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மொத்தம் 134 நாடுகளில் காற்றின் தரம் குறித்த அளவீடுகளுடன் ஆய்வு நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. மிகவும் மோசமான காற்றின் தரத்தை கொண்டுள்ள தலைநகரமாக டெல்லி நான்காவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் பிஎம் 2.5 துகள்களின் செறிவு 2022-ல் ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது. அது, 2023-ல் 92.7 மைக்ரோகிராமாக மோசமடைந்துள்ளது.

இதேபோல் காற்று மாசு மிகவும் மோசமான பெருநகரங்களில் பீகார் மாநிலம், பெகுசராய் நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் பி.எம் 2.5 துகள்களின் செறிவு ஒரு கனமீட்டருக்கு 118.9 மைக்ரோகிராமாக உள்ளது.

2022-ம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்த நகரம் இடம்பெறாத நிலையில், 2023-ல் மிகவும் மோசமடைந்துள்ளது.

மாசுபட்ட நாடுகளின் தர வரிசையைப் பொறுத்தவரை இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் சராசரியாக பிஎம் 2.5 துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது.

2022-ம் ஆண்டு 53.3 மைக்ரோகிராம் என்ற அளவுடன் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு மேலும் மோசமடைந்துள்ளது.

இந்தப் பட்டியலில் வங்காளதேசம் முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் சராசரி பிஎம் 2.5 துகள் செறிவு ஒரு கனமீட்டருக்கு 79.9 மைக்ரோகிராமாக பதிவாகியிருந்தது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான், ஒரு கனமீட்டருக்கு 73.7 மைக்ரோகிராம் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சராசரி ஆயுட்காலத்துக்கு முன்னதாக மரணிக்கும் 7 மில்லியன் நபர்களின் மரணங்களுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

பியூட்டி டிப்ஸ்:  கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவுமா சாதம் வடித்த கஞ்சி?

ஹெல்த் டிப்ஸ்: ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

திமுக கூட்டணியில் பதவி எங்களுக்கு முக்கியமல்ல: தமிமுன் அன்சாரி

 

+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *