india embassy helpline number in japan

ஜப்பானை தாக்கும் சுனாமி, நிலநடுக்கம்: உதவி எண்கள் அறிவிப்பு!

இந்தியா

ஜப்பானை தற்போது சுனாமி அலைகள் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் வடகொரியா மற்றும் ரஷ்ய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்படக்கூடிய ஜப்பான் நாட்டில் புத்தாண்டு தினமான இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் மேற்கு கடலோர பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது கடலில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து ஜப்பானின் கோயமா, இஷிகாவா, வஜிமா, ஹையோகோ நிகாடா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே சுனாமி அலைகள் ஜப்பானை தாக்க தொடங்கின. ஆனால் எச்சரிக்கை வந்தவுடன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

ஜப்பானில் தற்போது 5 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. பல்வேறு இடங்களில் 4 ரிக்டர் அளவில் சுமார் 21 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நிலநடுக்கத்தால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானில் சுமார் 33,500 குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடகொரியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் கட்டுப்பாட்டு அறை எண்களை அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 1, 2024 அன்று நிலநடுக்கம் மற்றும் சுனாமி தொடர்பாக தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. உதவிக்கு பின்வரும் அவசர எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

+81-80-3930-1715 (யாகூப் டோப்னோ)
+81-70-1492-0049 (அஜய் சேத்தி)
+81-80-3214-4734 (டி.என். பர்ன்வால்)
+81-80-6229-5382 (எஸ். பட்டாச்சார்யா)
+81-80-3214-4722 (விவேக் ரதீ)

sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். தூதரகம் ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. உள்ளூர் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா 

தமிழ் சினிமா 2023: பம்பர் முதல் வட்டார வழக்கு வரை!- வெற்றி, தோல்வி படங்கள் எது?

நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கும் ரகுல் பிரீத் சிங்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *