இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்று அசுர வேகத்தில் உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்தில் தனது செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர். நேற்றைய தினம் தீபாவளியை ஒட்டி லண்டனில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,”இந்தியப் பொருளாதாரம் இன்று அசுர வேகத்தில் வளரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. இந்தியாவில் மிகச்சிறந்த தலைமை இருக்கிறது. தொலைநோக்கு பார்வை இருக்கிறது. நல்ல ஆட்சி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி எப்போது வெளிநாட்டுக்கு சென்றாலும் பாரதத் தாய்க்கு நன்றி தெரிவிப்பதை விடுவதில்லை. கடினமான சூழ்நிலைகளும் கூட ஜி-20 தலைமையை மோடி தலைமையிலான அரசு வெற்றிகரமாக பெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு 24 மணி நேரமும் மக்களுக்கான பணியில் ஈடுபட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
தீபாவளி போன்ற நல்ல நாளில் மக்களுடன் இருப்பதை காட்டிலும் சிறந்த மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது. இது போன்ற ஒரு நாளில் இங்கிலாந்து வந்துள்ள நான் நம் சமூக மக்களை தேடி வந்து சந்திப்பது இயற்கையானது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் ஒரு நீண்ட சந்திப்பை முடித்துவிட்டு இந்த கோவிலுக்கு வந்திருக்கிறேன். இந்தியா – இங்கிலாந்து இடையேயான உறவு பற்றி விவாதிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவே இதை பார்க்கிறேன். பாரதத்தின் மீதான பார்வை எவ்வளவு மாறி இருக்கிறது என்பதை தற்போது காண முடிகிறது” என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து டவுனின் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோரை சந்தித்த ஜெய்சங்கர் அவர்கள் இருவருக்கும் விநாயகர் சிலை மற்றும் சுனக்கின் பேவரைட் வீரரான விராட் கோலியின் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்முகப் பிரியா
நெதர்லாந்துக்கு எதிராக 9 பவுலர்கள் பந்துவீசியது ஏன்?: ரோகித் விளக்கம்!
BiggbossTamil7 Day 42: வெளியேறிய ஐஷு… கதறிய நிக்ஸன்… இனி என்ன ஆகும்?