இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் கொரோனா XBB.1.16 வகை வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியா முழுவதும் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 10,093 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் 57,542 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5,31,114 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இறப்பு விகிதம் 1.19 சதவிகிதமாக உள்ளது. நேற்று 1,76,853 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பிற்குள்ளாகி மருத்துவமனையில் 3,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செல்வம்