இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு குறைந்தது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் 7,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,34,859-ல் இருந்து 4,48,45,401 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றினால் நேற்று ஒரேநாளில் 38 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,31,152-ல் இருந்து 5,31,190 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி: லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி சஸ்பெண்ட்!
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு: திருமாவளவன் கோரிக்கை!