இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே முடிவில்லாத தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இதுவரை போரில் 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இரண்டு இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மூன்று பேருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். காயமடைந்த ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டும். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: எப்படிப்பட்ட ஃபேஷன் ஆடைகள் கோடைக்கு உகந்தது?
கிச்சன் கீர்த்தனா : பஜ்ஜி மிளகாய் வெஜ் கைமா
டிஜிட்டல் திண்ணை: சிறுத்தைக் கணக்கு… ஸ்டாலின் ஆலோசனை!
திருமா கிண்டும் தெலங்கானா குருமா: அப்டேட் குமாரு