India-Bangladesh train service

பிரதமர் தொடங்கி வைக்கும் இந்திய – வங்கதேச ரயில் சேவை!

இந்தியா

இந்தியாவுக்கும் அண்டை நாடான வங்கதேசத்துக்கும் இடையே நீடித்து வரும் நல்லுறவை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையிலும், இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலும்,

பயண தூரத்தை குறைக்கும் வகையிலும், 15 கிலோமீட்டருக்கு பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை நாளை (நவம்பர் 1) தொடங்கப்பட உள்ளது.

அகர்தலா – அகவுரா எல்லை தாண்டிய இணைப்பு ரயில் சேவை (Agartala – Akhaura Cross Border Rail Link Project) என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 5 கிலோ மீட்டர் தூரம் இந்தியாவிலும், 10 கிலோ மீட்டர் தூரம் வங்கதேசத்திலும் நீள்கிறது.

இச்சேவை, இந்தியாவின் திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா நகரிலிருந்து வங்கதேசத்தின் அகவுரா நகர் வரை செல்கிறது.

இடையில் இரு நாட்டு எல்லைப்பகுதியில் புதிதாக அமைப்பட்டுள்ள நிஸ்சிந்தாபூர் (Nischintapur) சர்வதேச குடியேற்ற மைய ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்லும்.

அங்கு பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் பரிசோதிக்கப்படும்.

இந்த நீண்ட ரயில் தடத்தில் ஒரு பெரிய பாலமும், மூன்று சிறிய பாலங்களும் அமைந்துள்ளன.

இந்த சேவையின் மூலம் அகர்தலாவிலிருந்து ரயில் வழியாக கொல்கத்தாவை அடைய தற்போது 31 மணி நேரம் எடுக்கும் பயண நேரம், 10 மணி நேரமாக குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய ரயில்வே, தன் பங்கிற்கு சுமார் ரூ. 155 கோடி வரை இதற்காக செலவிட்டுள்ளது.

இருநாட்டுக்கு இடையேயான இந்த ரயில் சேவையை நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி மூலமாக காலை 11:00 மணியளவில் ஒன்றிணைந்து தொடங்கி வைக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

தொடங்கியது ஆப்பிள் Scary Fast நிகழ்ச்சி!

கிச்சன் கீர்த்தனா: பின்வீல் சமோசா

சென்சாரில் 60 கட் வாங்கிய ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா’!

வாட்ஸ் அப் WEB பயன்படுத்துவதிலும் மோசடியா? பயனர்களை எச்சரிக்கும் நிபுணர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *