பண்டிகை சீசன்: வாகன விற்பனை உயர்வு!

இந்தியா

பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. சில்லறை ஆட்டோமொபைல் வியாபாரம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என அட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பான‘FADA’ தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையின் படி, கடந்த ஆண்டு செப்டம்பரில் 15,63,735 யூனிட்களாக இருந்த மொத்த ஆட்டோ மொபைல் பதிவுகள் கடந்த மாதம் 18,82,071 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இரு சக்கர வாகன விற்பனை 22 சதவீதம், மூன்று சக்கர வாகன விற்பனை 49 சதவீதம், பயணிகள் வாகன விற்பனை 19 சதவீதம், மற்றும் வர்த்தக வாகன விற்பனை 19 சதவீதம் ஆகும். கடந்த மாதத்தில் வாகனப் பதிவுகள் 19 சதவீதம் அதிகரித்து 3,32,248 யூனிட்களாக இருந்தது.

இது கடந்த ஆண்டு செப்டம்பரில், 2,79,137 யூனிட்களாக இருந்தது.  புதிய தயாரிப்பு வெளியீடுகளும் வாகனங்களின் விற்பனையை மேம்படுத்த வழிவகுத்தன.

இந்நிலையில், வரும் நவராத்திரியில் இருந்து தொடங்கும் பண்டிகை காலம், வாகன விற்பனைக்குச் செழிப்பான காலம் என ‘FADA’ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஷா

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

.ஷாருக்கானுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு!

அதிமுக பாஜகவை பாதுகாக்கிறது: அமைச்சர் ரகுபதி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *