தலைவர்கள் மறுப்பு… இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு!

அரசியல் இந்தியா

மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் என முக்கிய தலைவர்கள் இல்லாததால் நாளை (டிசம்பர் 6) நடைபெறவிருந்த இந்தியா கூட்டணி கட்சியின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட  5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில்,  நாளை இந்தியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டது.

ஆனால் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க முடியாததால், கூட்டம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் பாங்கேற்காதது ஏன்?

கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ”நான் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 11 வரை மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு செல்கிறேன். டிசம்பர் 6-ம் தேதி கூட்டம் அறிவிப்பு பற்றி எனக்குத் தெரியாது. இதுகுறித்து முன்பே தெரிந்திருந்தால், எனது பயண திட்டத்தை நான் மாற்றியமைத்திருப்பேன்” என்று கூறியிருந்தார்.

சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், ”கூட்டத்தில் கலந்து கொள்ளும் திட்டம் எதுவும் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு இல்லை. பேராசிரியர் ராம் கோபால் யாதவ் அல்லது தேசியத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட வேறு தலைவர்கள் கூட்டத்திற்கு செல்வார்கள்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

”5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிஸியாக இருப்பதால், புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணிக்கு காங்கிரஸ் முன்னுரிமை கொடுக்கவில்லை” என்று அவர் சில நாட்களுக்கு முன்பு குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

மீண்டும் சென்னைக்கு கனமழை உண்டா?

தெலங்கானா… காங்கிரஸ் அண்ணாவா? ஆர்.எஸ்.எஸ். அண்ணாவா? யார் இந்த ரேவந்த் ரெட்டி?  

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *