5ஜி சேவை: குஜராத்தில் 30 நகரங்கள்!

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலில் 30 இடங்களை குஜராத் பிடித்துள்ளது.

நாட்டில் விரைவான தொலைத்தொடர்பு வசதிக்காகவும், அத்தகைய கட்டமைப்பை விரிவுபடுத்தவும் மத்திய அரசு பல்வேறு கொள்கை முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 5ஜி சேவையையும் நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது.

4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை வழங்கும் 5 ஜி சேவையை இந்தியாவில் பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் தொடங்கிவைத்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள 4 ஜி சேவையைவிட 100 மடங்கு வேகத்தை 5ஜி வழங்குகிறது. 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் விடப்பட்டது.

india 5g services in 50 towns

ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களுடன் அதானியின் நிறுவனம் சுமார் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 5 ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்தது.

இந்த ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. 5-ஜி அலைக்கற்றைகள் ஏலம்விடப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தச் சேவையை வழங்கி வருகின்றன.

சில நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நகரங்களில் விரைவில் 5ஜி சேவை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நாட்டில் 5ஜி சேவை அமையவுள்ள 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு இன்று (டிசம்பர் 14) வெளியிட்டுள்ளது.

5ஜி சேவை நகரங்கள்

தமிழ்நாடு: சென்னை
டெல்லி: டெல்லி
மகாராஷ்டிரா: மும்பை, நாக்பூர், புனே.
மேற்கு வங்கம்: கொல்கத்தா, சிலிகுரி.
உத்தரப்பிரதேசம்: வாரணாசி, லக்னோ.
கர்நாடகா: பெங்களூரு
தெலங்கானா: ஹைதராபாத்
ராஜஸ்தான்: ஜெய்ப்பூர்
ஹரியானா: பானிபட்
அசாம்: கெளஹாத்தி
கேரளா: கொச்சி
பீகார்: பாட்னா
ஆந்திரா: விசாகப்பட்டினம்

india 5g services in 50 towns

குஜராத்: அகமதாபாத், காந்திநகர், பாவ்நகர், மெசானா, ராஜ்கோட், சூரத், வதோதரா, அமரெலி, போடாட், ஜுனகாத், போர்பந்தர், ஹிமத்நகர், மோடாசா, பாலன்பூர், பதான், பூஜ், ஜாம் நகர், கம்பாலியா, மோர்வி, வாத்வான், பாருச், நவ்சாரி, ராஜ்பிப்லா, வல்சாத், வியாரா, அனாந்த், சோட்டா உதய்பூர், தோஹாட், கோத்ரா, லூனாவாடா, நடியாத்.

5ஜி சேவை வழங்கப்படும் நாட்டின் 50 நகரங்களில் 30 நகரங்கள் குஜராத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

டீசர் வெளியீடு: ரத்தவாடை வீசும் ’தலைநகரம் 2’!

சீனியாரிட்டி பட்டியல்: 10வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts