கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க தீவிர வேலை செய்வது அல்லது கடின உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மான்ட்வியா தெரிவித்துள்ளார்.
2019-ல் இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். இதனால் 2022 வரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழலில் அண்மை காலங்களாக இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
கடந்த அக்டோபர் 22ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் நடந்த நவராத்திரி விழாவில் நடந்த கர்பா நடனத்தின் போது 17 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சிறுவன் மட்டுமின்றி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 10 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இது போன்ற மரணங்கள் இளைஞர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வை மேற்கோள்காட்டி ஒரு முக்கிய தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மான்ட்வியா தெரிவித்துள்ளார்.
குஜராத்தி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள மன்சுக் மான்ட்வியா, “கடுமையான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தீவிர உடற்பயிற்சி அல்லது கடின உழைப்பு மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மார்க் ஆண்டனி இயக்குனருக்கு BMW கார் பரிசு!
அமர் பிரசாத் ரெட்டிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!