இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் வேகமாக உயர்ந்து வருவது ஒன்றிய அரசின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறதா? என்றும் கடந்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை? உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை? தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார்,புற்றுநோயை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்களுடன் இணைத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசின் நேரடி திட்டங்கள் பலவும் புற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், 2022ம் ஆண்டில் நாடு முழுவதும் 14,61,427 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடப்பாண்டில் ஒட்டு மொத்த இந்தியாவிலும் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக 8,08,558 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 2022ம் ஆண்டில் 14.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,21,717 பேரும், இரண்டாவதாக மேற்குவங்க மாநிலத்தில் 1,13,581 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, 2018ம் ஆண்டில் 45,846 பேர் உயிரிழந்த நிலையில், 2019ம் ஆண்டில் 47,075 பேரும், 2020ம் ஆண்டில் 48,314 பேரும், 2021ம் ஆண்டில் 49,571 பேரும் உயிரிழந்து உள்ளனர். மேலும், 2022ம் ஆண்டில் மட்டும் 50,841 பேர் புற்றுநோயால் உயிரிழந்து உள்ளது தெரியவந்துள்ளது.
கலை.ரா
வாரிசு படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட்: ஆனால்…