இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி உட்பட 80 பேர் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஊழல் வழக்கில் கடந்த 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையை அடுத்து அவரும், பிடிஐ கட்சியினரும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி மற்றும் பிடிஐ கட்சித் தலைவர்கள் முராத் சயீத், மலீகா புகாரி, ஃபவாத் சௌத்ரி மற்றும் ஹம்மாத் அசார், காசிம் சூரி, ஆசாத் கைசர், யாஸ்மின் ரஷீத் மற்றும் மியான் அஸ்லாம் உள்ளிட்ட 80 பேர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை நேற்று (மே 26) இரவு பிறப்பித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், 80 பேரும் வெளிநாடு செல்வதை தடுக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊழல் வழக்கு உட்பட பல்வேறு காரணங்களுக்காக குற்றஞ்சாட்டப்படுகிறவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தானில் தடைவிதிக்கப்படுவது வழக்கம்.
இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ஷெபாஸ் ஷரீப் உட்பட பல உயர்மட்ட பிரமுகர்களின் பெயர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை பட்டியலில் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
“ஒரு மாசமா கரண்ட் இல்ல”: இரவில் மக்கள் சாலை மறியல்!
பழனி: வைகாசி விசாக திருவிழா நாளை கொடியேற்றம்!