அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு பெயரை மாற்றி வைப்பதால் அவை சீனாவிற்கு சொந்தமாகி விடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஏப்ரல் 1) தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எல்லையில் உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தங்கள் நாட்டின் பகுதி என உரிமை கோரி வருகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தை மையப்படுத்தி அவ்வபோது பல கருத்துகளை வெளியிட்டு, இந்தியாவுடன் சீண்டலில் ஈடுபடுவதை சீனா வாடிக்கையாக கொண்டுள்ளது.
அதன்படி, தற்போது அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களுக்கு சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் மறுபெயர் சூட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான செய்தியை ஹாங்காங் பகுதியின் ஒரு நாளிதழ் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை, சீனா அரசு “ஜாங்னான்” என பெயரிட்டுள்ளது
இந்த செய்தியை அடுத்து, அருணாச்சலப்பிரதேசத்தில் அத்துமீறி வரும் சீனாவுக்கு எதிர்க்கட்சிக்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆளும் பாஜக அரசு கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தது சர்ச்சையானது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்று தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளார்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால் அந்த வீடு என்னுடையது ஆகிவிடுமா? அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் அங்கம்தான்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகி விடாது. பெயர்களை மாற்றுவதால் எந்த பலனும் இல்லை; சீனா பெயரை மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது; எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவம் கண்காணிப்பில் உள்ளது”என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சார்பாக தற்போது மறுபெயர் சூட்டப்பட்ட இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலை கணவாய் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலூரில் மும்முனை போட்டியா? : கதிர் ஆனந்த் பதில்!
Mrunal Thakur: தென்னிந்திய சென்ஷேசனலின் ‘சொத்து’ மதிப்பு இதுதான்!
தீவிரமாகும் ‘கச்சத்தீவு’ விவகாரம்: தமிழக அரசியல் தலைவர்கள் ரியாக்சன் என்ன?
புரியுதுங்ணா, எவனும் அருணாச்சல் பத்தி பேசிறக்கூடாதுனுதானே இப்ப கச்சத்தீவு பத்தி கெளப்பி விட்ருக்கீங்க, புரியுதுணா
என்னண்ணா, இப்படி அறிக்கை விட்டுண்டு இருக்கேள்? நம்மாளு 56″ இருக்கச்சே இப்படிலாம் பேஷாதேள். ஷொல்லுங்கோ வெற்றி வேல், வீர வேல்…