பயிற்சினு அனுப்புனாங்க; போருக்கு போறேனு தெரியல!- உக்ரைனிடம் சிக்கிய வடகொரிய வீரர் புலம்பல்!

Published On:

| By Kumaresan M

தன்னை பயிற்சிக்காக ரஷ்யாவுக்கு அனுப்பினார்கள் என்று கருதியதாகவும், போருக்கு போவதாக நினைக்கவில்லை என்றும் உக்ரைனில் பிடிபட்ட வடகொரிய வீரர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வருகிறது. ஆண்டு கணக்கில் இந்த போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உக்ரைன் பிரதமர் ஷெலான்ஷ்கி, ரஷ்யாவின் வடக்கு குர்ஷ் பகுதியில் காயமடைந்து கிடந்த இரு வட கொரிய வீரர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு சர்வதேச போர்க்குற்றவாளிகள் நடைமுறையின்படி நடத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, உக்ரைன் செக்யூரிட்டி சர்வீசஸ் அதிகாரிகள் அவர்களிடத்தில் விசாரணை நடத்தினர். பிடிபட்ட அந்த வீரர்களுக்கு உக்ரைனியன், ரஷ்ய, ஆங்கில மொழிகள் எதுவும் தெரியவில்லை. தொடர்ந்து, தென்கொரிய புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் கொரிய மொழியில் அவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பிடிபட்ட வீரர்கள், ரஷ்ய துருப்புகளுடன் ஒரு வார காலம் பயிற்சிக்கு என்று அனுப்பினர். எங்களுக்கு போருக்கு போவது தெரியாது என்று கூறியுள்ளனர். பிடிபட்ட இருவரும் 30 வயதுக்குள்ளானவர்கள். பிடிபட்ட இருவருடத்தில் உள்ள அடையாள அட்டைகளை வைத்து பார்க்கும் போது ஒருவர் 1999 ஆம் ஆண்டும் மற்றொருவர் 2005 ஆம் ஆண்டும் பிறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வட கொரிய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

உக்ரைன் நாட்டுடன் ரஷ்யா நடத்தி வரும் போரில் பங்கேற்க வட கொரியா சார்பில் 11 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

வெறிச்சோடிய சென்னை… சொந்த ஊருக்கு செல்ல கைகொடுக்கும் அரசு பேருந்துகள்!

தங்கம் விலையில் தொடர் ஏற்றம்… பொங்கல் பண்டிகை எதிரொலியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel