யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று ஓய்வு பெற்ற நாளில் தலைமை நீதிபதி சந்திரசூட் உருக்கமாக பேசியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றார்.
அவரது பதவிகாலம் வரும் நவம்பர் 10ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
வரும் 11ஆம் தேதி நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதியாக பதவிஏற்கவுள்ளார்.
நாளை, நாளை மறுநாள் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் இன்றே ஓய்வு பெற்றார்.
அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரியாவிடை அளித்தனர்.
உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணி நிறைவு நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் நீதிபதிகளில் நானும் ஒருவன்.
வரும் திங்கட்கிழமை முதல் என்ன நடக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன், ஏனென்றால் என்னை ட்ரோல் செய்த அனைவருக்கும் வேலையில்லாமல் போய்விடும்.
உங்கள் சொந்த வாழ்க்கையைப் பொது அறிவுக்கு வெளிப்படுத்தும்போது, உங்களை விமர்சனத்திற்கு ஆளாக்குகிறீர்கள். இந்த சமூக ஊடக யுகத்தில் அனைத்து விமர்சனங்களையும் ஏற்கும் அளவுக்கு எனது தோள்கள் அகலமாக உள்ளன” என்றார்.
மேலும் அவர், “நான் உங்களை யாரையாவது காயப்படுத்தி இருந்தாலோ, பாதித்திருந்தாலோ மன்னித்து விடுங்கள். ஏனென்றால் நான் எதையும் உள்நோக்கத்தோடு செய்ததில்லை. நாளை முதல் நான் தீர்ப்பளிக்கமுடியாது. ஆனால் பணி ஓய்வு நாளில் நிறைவாக உணர்கிறேன்.
என்னை இந்த நீதிமன்றம்தான் வழிநடத்தியது. ஏனென்றால் தேவைப்படுபவர்களுக்கும், தெரியாத நபர்களுக்கும், அவர்களைப் பார்க்காமலேயே சேவை செய்வதை விட மேலான உணர்வு எதுவும் இல்லை” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கால்வாயில் நீந்தி சென்று உடல் அடக்கம் : பதைபதைக்கும் காட்சி!
நல்லடக்கம் செய்யப்பட்ட வேகன் ஆர் கார்… பின்னணியில் சுவாரஸ்ய தகவல்!
வயநாட்டில் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிடும் தமிழ் சீக்கிய பெண் சீதா கவுர்… யார் இவர்?