என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… மனைவி கொடுமைக்கு பயந்து மொட்டையடித்த ஐடி இளைஞர்!

இந்தியா

பெங்களுரு நகரை சேர்ந்தவர் விபின். ஐ.டி துறையில் வேலை பார்க்கும் விபினுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஏடிஎம் போய் விட்டு வருவதாக கூறி சென்ற விபின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரின் மனைவி சமூகவலைத்தளங்களில் விபினின் புகைப்படங்களை வெளியிட்டு கண்டுபிடித்து தர உதவி கோரினார். அதோடு, போலீசார் தனது கணவரை கண்டுபிடிக்க உதவ மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடினர். இதற்கிடையே, புதிய சிம்கார்டு ஒன்றை வாங்கிய விபின், அதை தனது செல்போனில் போட்டுள்ளார். இந்த சமயத்தில் அவரின் செல்போன் சிக்னல் நொய்டாவை காட்டியது. சுதாரித்துக் கொண்ட போலீசார் நொய்டா சென்றனர். அங்கு, ஏராளமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மனைவி தனது படத்தை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்ததால், அடையாளம் தெரியாமல் இருக்க விபின் மொட்டையடித்து கொண்டு ஊர் சுற்றியுள்ளார்.

அங்குள்ள தியேட்டர் ஒன்றில் விபின் படம் பார்க்க சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, படம் முடிந்து வெளியே வந்த விபினை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரை, பெங்களுருவுக்கு கொண்டு வர முயன்ற போது, கடும் ஆவேசமடைந்தார். வேண்டுமானால் என்னை சிறையில் போடுங்கள்… அவளுடன் வாழவே முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அவரை சமாதானம் செய்து சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். விசாரணையில் தனது மனைவிக்கு தான் இரண்டாவது கணவர் என்றும் 12 வயது குழந்தையுடன் அவரை திருமணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, மனைவி விரும்பியபடிதான் டிரெஸ் அணிய வேண்டும், சாப்பிட வேண்டும் தனியாக டீ குடிக்க கூட செல்ல முடியாது என்றும் வேதனையுடன் கூறியுள்ளார். தொடர்ந்து,  விபினின் மனைவிக்கு அறிவுரை கூறி போலீசார் விபினை ஒப்படைத்துள்ளனர்.

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக – திமுக இடையே ரகசிய உறவா? – எடப்பாடிக்கு எல்.முருகன் பதில்!

நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர் : அமலாக்கத் துறைக்கு உத்தரவு!

 

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *