திருமணமான 40 நாளில் 6 முறை மட்டுமே குளித்த கணவர்… நாற்றம் தாங்காமல் மனைவி செய்த சம்பவம்!

இந்தியா

உத்தர பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு, 40 நாட்களுக்கு முன் ராஜேஷ் என்பவருடன்  திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் ஆனந்தமாக சென்ற திருமண வாழ்க்கை சில தினங்களிலே பிரச்னையாக மாற தொடங்கியது.

கணவருக்கு தினமும் குளிக்கும் பழக்கம் இல்லை என தெரிந்ததும், அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உடலில் துர்நாற்றம் வீசுவதால் தினமும் குளிக்கும்படி அறிவுரை கூறினார்.  கணவருக்கோ தண்ணீரை கண்டாலே ஆகாது.  இதன் காரணமாக கணவன் – மனைவி இடையே தினமும் சண்டை நடந்துள்ளது. ஒருகட்டத்தில் நாற்றம் பொறுக்காத மனைவி, தாய் வீட்டுக்கே ஓடி விட்டார்.

பின்னர், விவாகரத்து பெற என்ன வழி என்று யோசித்தார். முதலில் வரதட்சணைக்காக கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் கணவர் குளிக்கததுதான் காரணம் என்று உண்மையை அறிந்தனர். இதையடுத்து, போலீசாரும் கணவரிடத்தில் தினமும் குளிக்கும்படி அறிவுரை கூறி அனுப்பினர். ஆனாலும், கணவர் கேட்டபாடில்லை.

இதனால் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை மனைவி அணுகினார். அப்போது, மனநல ஆலோசகர்களிடத்தில் மாதத்துக்கு ஓரிருமுறைதான் குளிப்பேன் என்றும் மற்றபடி கங்கை நீரை உடலில் தெளித்து கொள்வதுதான் தனது வழக்கம் என்றும் கணவர் தெரிவித்தார்.

மேலும் திருமணமான பிறகு, மனைவியின் தொந்தரவு தாங்காமல்தான் 6 நாட்கள் குளித்ததாக அந்த கணவர் கூற, இதை கேட்டு ஆலோசகர்கள் அதிர்ந்தே போனார்கள். தொடர்ந்து, இருவரிடத்தில் சமாதானப் பேச்சு வார்த்தை நடக்கிறது. ஆனாலும், ’கணவர் தினமும் குளித்தால் மட்டும்தான் வாழ்வேன் இல்லையென்றால் விவகாரத்துதான் ஒரே வழி’ என்று மனைவி உறுதியாக கூறி வருகிறார்.

ஆக்ராவில் இதற்கு முன்பும் பெண் ஒருவர் இதே போன்று வித்தியாசமான காரணம் கூறி விவாகரத்து கேட்டது சிரிப்பை ஏற்படுத்தியது.

அந்த மனைவிக்கு குர் குரே ஸ்னாக்ஸ் மிகவும் பிடிக்கும். தினமும் 5 ரூபாய்க்கு அந்த குர் குரே பாக்கெட்டை கணவர் வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு நாள் கணவர் வாங்கி வர மறக்கவே, சண்டையாக மாறியுள்ளது. தொடர்ந்து, அந்த பெண் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியது வியப்பை ஏற்படுத்தியது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

23 வயது இளைஞர்… கால்பந்து விளையாடிய போது நடந்த பரிதாபம்… நடந்தது என்ன?

பெரியார் பிறந்தநாள் : ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0