பள்ளிக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக அதே பள்ளியில் படித்த 2ஆம் வகுப்பு சிறுவனை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை பள்ளி இயக்குநர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தாஸ் என்ற நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆம் வகுப்பில் சிறுவன் ஒருவன் படித்து வந்தான். பள்ளி விடுதியில் சிறுவன் தங்கியிருந்துள்ளான். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் சிறுவனை விடுதி அறையில் இருந்து கடத்தி சென்றுள்ளது. பிறகு, பள்ளிக்கு அருகேயுள்ள ஒரு இடத்தில் பூஜைகள் செய்து நரபலி கொடுத்துள்ளது.
இது குறித்து பெற்றோர் போலீசாரிடத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் பள்ளியின் உரிமையாளர் ஜேசோந்சிங், அவரின் மகன் தினேஷ் பெகல், பள்ளி முதல்வர் லக்ஷ்மண் சிங் மற்றும் இரு ஆசிரியர்கள் என 5 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது.
அதாவது, தற்போது அந்த பள்ளி நிதி நெருக்கடியில் இருந்துள்ளது. இதனால், சாமியார் ஒருவரிடத்தில் கேட்ட போது, பள்ளி நன்றாக வளர்ச்சியடைய வேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து, தங்கள் பள்ளியிலேயே படித்த சிறுவனை நரபலி கொடுத்துள்ளனர்.
பலியிடப்பட்ட சிறுவனின் தந்தை கூறுகையில், ”எனது மகனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போனில் அழைத்தனர். நாங்கள் சென்ற போது, மருத்துவமனைக்கு கொண்டு சென்று கொண்டிருப்பதாக கூறினர். உடனடியாக, மற்றொரு காரில் நாங்கள் அவர்களை விரட்டி சென்று நிறுத்தினோம். அப்போது, காருக்குள் சிறுவன் சடலமாக கிடந்ததை பார்த்து பதறிப் போனாம்” என்கிறார்.
உத்தரபிரதேசத்துல வாழ்றது கொஞ்சம் கஷ்டம்னு கேள்விப் பட்டுருக்கோம். ஆனா, இந்தளவுக்கு கஷ்டம்னு இப்போதான் புரியுதுப்பா!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“45 நிமிஷம்” ஸ்டாலின்-மோடி மீட்டிங்… பேசியது என்ன?
சென்னை – சொத்து வரி மீண்டும் உயர்வு : தீர்மானம் நிறைவேற்றம்!
மாட்டுக்கறி கூட சாப்பிட விடாம, விவசாயிகள் மாடுகளை நல்ல விலைக்கு கூட விக்கவும் விடாம, ரொம்ப கம்மி விலைக்கு வாங்கி, கொள்ளை லாபத்துல ஏற்றுமதி பண்ற மாநிலமாமே?