tirupathi November month ticket

திருப்பதி நவம்பர் மாத தரிசனம்: எந்த தேதியில் எதற்கான டிக்கெட்டை பெறலாம்?

இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீட்டு விவரங்களை  திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது .

இதை பக்தர்கள் இன்று (ஆகஸ்ட் 21) காலை 10 மணி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி தங்களின் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாளை (ஆகஸ்ட் 22) காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலங்கர சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தொடர்புடைய பிரேக் தரிசன டிக்கெட்டுகள், வரும் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

24ஆம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

இருதலைக் கொள்ளி எறும்பு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *