பிரபல பானமான ரஸ்னாவின் நிறுவனத் தலைவரான அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பட்டா கடந்த 19ம் தேதி அகமதாபாத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மரணம் குறித்த விளக்க அறிக்கையை அவரது சொந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
ரஸ்னா என்பது இந்தியாவின் அகமதாபாத்தில் அமைந்துள்ள பியோமா இண்டஸ்ட்ரீஸுக்குச் சொந்தமான குளிர்பான செறிவூட்டிய பொடிகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும்.
மக்களின் வரவேற்பில் ரஸ்னா!
இதனை 1976ம் ஆண்டு அரீஸ் கம்பட்டாவின் தந்தை பிரஜோஸ் தொடங்கி வைத்தார்.
1980ஸ்களில் ஆதிக்கம் செலுத்திய தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட் மற்றும் லிம்கா போன்ற கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.
அதிக விலைக்கு விற்கப்பட்ட இந்த குளிர்பான பொருளுக்கு மாற்றாக ரஸ்னாவை மலிவு விலையில் அறிமுகம் செய்து வெற்றிகரமான நிறுவனமாக மாற்றினார் அரீஸ் கம்பட்டா.
ரூ.5 மதிப்புள்ள ரஸ்னாவின் ஒரு பொடியின் மூலம் 32 கிளாஸ் குளிர்பானங்களாக மாற்றலாம். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அன்றைய காலத்தில் வெளியான “ஐ லவ் யூ ரஸ்னா” விளம்பரம் இன்னும் மக்கள் மனதில் எதிரொலித்து வருகிறது.
2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் குளிர்பானங்கள் செறிவூட்டப்பட்ட சந்தையில் ரஸ்னா 93 சதவீத சந்தைப் பங்கை கொண்டுள்ளது.
இன்று 60க்கும் மேற்பட்ட நாடுகளில் மிகப்பெரிய விற்பனையைக் கொண்ட குளிர்பான பிராண்டாக ரஸ்னா உள்ளது.

இந்தியாவில் 9 உற்பத்தி மையங்களை கொண்ட ரஸ்னா 26 டிப்போக்களில், 900 விற்பனையாளர்களுடன் நாட்டில் 1.8 மில்லியன் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறது.
தி இன்டர்நேஷனல் டேஸ்ட் அண்ட் குவாலிட்டி இன்ஸ்டிட்யூட், பெல்ஜியம் கேன்ஸ் லயன்ஸ் லண்டன், மொண்டே செலக்ஷன் விருது, மாஸ்டர் பிராண்ட் தி வேர்ல்ட் பிராண்ட் காங்கிரஸ் விருது மற்றும் ITQI உயர்ந்த சுவை மற்றும் தர விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ரஸ்னா நிறுவனர் அரீஸ் கம்பட்டா பெற்றுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்ட அரீஸ், ரஸ்னா நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பை, தனது மகன் பைரூஸ் கம்பட்டாவுக்கு வழங்கினார், அவர் இப்போது குழுமத் தலைவராக உள்ளார்.
நிறுவனம் விளக்க அறிக்கை!
அரீஸ் கம்பட்டாவின் மறைவையொட்டி ரஸ்னா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ரஸ்னா குழுமத்தின் நிறுவனர் தலைவர் மற்றும் அரீஸ் கம்பட்டா பெனிவலண்ட் டிரஸ்ட் மற்றும் ரஸ்னா அறக்கட்டளையின் தலைவருமான அரீஸ் கம்பட்டா கடந்த நவம்பர் 19, 2022 அன்று மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த துக்கத்துடனும் வருத்தத்துடனும் அறிவிக்கிறோம்.
இந்திய தொழில், வணிகம் மற்றும் மிக முக்கியமாக சமூக வளர்ச்சிக்கு அரீஸ் கம்பட்டா பெரும் பங்களிப்பை அளித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
FIFA WorldCup : வருவாய் அதிகரிக்க நெத்தியடி கணக்கு போடும் கத்தார்