தேனிலவுக்கு கோவா அழைத்துச் செல்வதாக உறுதி அளித்த கணவர் வாக்குத் தவறி அயோத்திக்கு அழைத்துச் சென்றதால், விவாகரத்துக் கோரி இளம் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்திருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் குடும்ப நல நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட இந்த விவகாரத்து மனு, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பந்தமாகப் பேசியுள்ள உறவுகள் நல ஆலோசகர், “அந்தத் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் திருமணமாகியுள்ளது. கணவர் தகவல் தொழில்நுட்ப பொறியாளராகப் பணியாற்றுகிறார். அந்தப் பெண்ணும் நல்ல வேலையில் உள்ளார். பெண் தேனிலவுக்கு வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுள்ளார். அதற்கு கணவரோ தனது வயதான பெற்றோரின் விருப்பப்படி, இந்தியாவில் உள்ள ஆன்மிக நகரத்துக்குச் செல்லலாம் என்று வலியுறுத்தியுள்ளார். இறுதியாக இருவரும் கோவா செல்வது என முடிவெடுத்தனர்.
ஆனால், கணவரோ அவரது அம்மாவின் விருப்பப்படி, அயோத்தி, வாரணாசிக்கு செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். அதை மனைவியிடம் பயணத்துக்கு முதல் நாள் வரை சொல்லவும் இல்லை. திட்டமிட்டபடி அந்தத் தம்பதியினர் அயோத்திக்குச் சென்றனர் என்றாலும் பயணம் முடிந்து வந்து அப்பெண் தனது கணவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்” என்றவர்,
மேலும், “கணவர் தன்னுடைய நம்பிக்கையை உடைத்துவிட்டதாக கூறிய அப்பெண், திருமணமான நாளிலிருந்தே கணவர் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்” என்று கூறியுள்ளார். தற்போது இந்த தம்பதியினர் போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆலோசனை பெற்று வருகின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உக்ரைன் போரின் முடிவு, இந்தியாவின் நிலைப்பாடு – பகுதி 1
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : சாக்லேட் சேமியா
‘கழக’ தலைவர் விஜய்… அதிகாலை கூட்ட ரகசியம்!