சீனாவுக்கு எந்தவித அச்சமும் இல்லாமல் வெளிநாட்டவர் பயணம் செய்யலாம் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது. இந்தநிலையில், சீனாவில் மீண்டும் ஹியூமன் மெட்டாப்நியூமோ என்ற புதிய வைரஸ் பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இந்த நோய் விரைவாக பாதிக்கிறது. இந்த வைரஸால் கடுமையான காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்படுகின்றன.

இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சுகாதாரத்துறையும் தொடந்து கண்காணித்து வருகிறது.
இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, “குளிர்காலத்தில் சுவாச நோய்த்தொற்று பாதிப்பு என்பது சீனாவில் பொதுவானது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நோய் தீவிரம் குறைவாக இருக்கிறது
குளிர்காலத்தில் சுவாச நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக சீனாவின் தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சீனாவில் வசிக்கும் மக்கள் மற்றும் இங்குள்ள வெளிநாட்டவரின் ஆரோக்கியத்தில் சீன அரசு அக்கறையாக உள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சீனாவுக்கு பயணம் செய்வதால் எந்தவித பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
14 வயது மனைவி டெலிவரிக்காக அட்மிட் : 17 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு!
’தமிழக அரசுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும்’ : திமுகவுக்கு சிபிஎம் தலைவர்கள் எச்சரிக்கை!