கொரோனாவைத் தொடர்ந்து தற்போது சீனாவில் ஹியூமன் மெட்டாப்நியூமோ என்ற புதிய வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.
2019ல் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்துக்கும் பரவியது. இதில் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இன்னும் பொருளாதார ரீதியாக முழுமையாக பல நாடுகள் மீளவில்லை. இந்த நிலையில் சீனாவில் மற்றொரு சுவாச தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது.
எச்எம்பிவி – ஹியூமன் மெடா நிமோ வைரஸ் பரவல் சீனாவில் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை விரைவில் பாதிக்கிறது. இந்த வைரஸால் கடுமையான காய்ச்சல், நுரையீரல் தொற்று பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சுவாசப்பாதை மற்றும் தொண்டையில்தான் தொற்றை ஏற்படுத்தும். இருமல், சளி அல்லது மூக்கு அடைப்பு , காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும். ஒரு சிலருக்கு நிமோனியா, ஆஸ்துமா உள்ளிட்டவற்றை உண்டாக்கும் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) மேற்கு பசிபிக் பிராந்திய அலுவலக தரவுகளின்படி, டிசம்பர் 16-22 வரை, சீனா முழுவதும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன.
இது கோவிட் 19 தொற்றுநோயைப் போன்ற மற்றொரு பொது சுகாதார நெருக்கடியை உருவாக்கிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விக்கிரவாண்டி: பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!
அமைச்சர் முத்துசாமியின் தீவிர ஆதரவு ஒன்றிய செயலாளர் திடீர் ராஜினாமா… ஏன்?