புதுச்சேரியில் ஹெச்எம்பிவி பாதிப்பு மூன்றாக உயர்வு!

Published On:

| By christopher

புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு ஐந்து வயது குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது ஒரு வயது குழந்தைக்கு ஹெச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழந்தை தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது.

புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் ஐந்து வயது சிறுமி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உடல் நலம் தேறி நலமுடன் வீட்டுக்கு திரும்பினார்.

அடுத்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கடும் காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சைக்காக சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கும் ஹெச்எம்பிவி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஒரு வயது குழந்தைக்கு ஹெச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழந்தை தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குழந்தை நலமுடன் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், ‘குழந்தையின் பெற்றோருக்கு போதிய விழிப்பு உணர்வு வழங்கப்பட்டது. ஜிப்மரில் உள்ள நிலையான நெறிமுறையின்படி அனைத்துக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த வகை வைரஸ் தொடர்பாக புதுச்சேரி அரசும் தொடர்ந்து கண்காணித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் பொதுமக்கள் அச்சமோ, பீதியடையவோ தேவையில்லை.

கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனையில் பெரியவர்களுக்கென 10 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டும், ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக 6 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டும் அமைக்கப்பட்டு விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த நோய் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என்று புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘தமிழர்களாய் ஒன்றிணைவோம்’ : ஸ்டாலின் முதல் விஜய் வரை… தலைவர்களின் பொங்கல் வாழ்த்து இதோ!

கோவை பீப் கடை விவகாரம்: பாஜக அலுவலகம் மீது வீசப்பட்ட மாட்டுக்கறி!

ஹெல்த் டிப்ஸ்: தினமும் இரவில் பால் குடிப்பது நல்லதா?

பியூட்டி டிப்ஸ்: ஏசி அறையிலேயே பணியாற்றுபவரா நீங்கள்?

நீட் தேர்வை வைத்து திமுக மக்களை ஏமாற்றுகிறதா?

டாப் 10 நியூஸ் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் ரவியின் காதலிக்க நேரமில்லை ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : தால் வடா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share