அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடப்போவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் இன்று (ஜனவரி 16) தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதானி குழுமம் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்டது.
மேலும், அதானி குழுமத்திடம் 88 கேள்விகளை முன்வைத்திருந்து. தங்கள் குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட நடவடிக்கையை மறுத்து அதானி குழுமம் 413 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது.
ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமம் தொடர் சரிவை சந்தித்தது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்திலிருந்த அதானி 17-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்தநிலையில், ஹிண்டன்பெர்க் நிறுவனத்தை மூடப்போவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹிண்டன்பெர்க் தொழில் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவது தொடர்பாக கடந்த ஆண்டு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவினருடன் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இந்த முடிவுக்கு பின்னால் எந்த ஒரு புற அழுத்தங்களும் அச்சுறுத்தலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது ஒரு தற்செயலான முடிவு.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து புலனாய்வு முடிவுகளையும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மொத்தமாக வெளியிடுவோம். இது மற்றவர்களையும் இதேபோன்ற பணிகளைத் தொடர ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் 11 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிறிய நிறுவனம். ஆனால், எங்கள் குழுவில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்பு மிக்கவர்கள். அவர்களின் ஆதரவினால் தான் பெரு நிறுவனங்களின் மோசடிகளை துல்லியமான, ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த முடிந்தது.
கிட்டத்தட்ட 100 நபர்கள் எங்கள் விசாரணைகளின் விளைவாக சிவில் அல்லது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இதில் மிகப்பெரிய தொழிலதிபர்களும் அடங்குவார்கள். எங்களது பணியின் மூலம் சில அரசுகளையே நாங்கள் அசைத்துள்ளோம்” என்று ஆண்டர்சன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜாமீன் கிடைத்தும் சிறையில் உறங்கிய பாபி செம்மனூர்: நீ நடத்தும் நாடகமே!
சாம்பியன்ஸ் டிராபி : பாக். செல்லாத இந்திய அணி… ரோகித் மட்டும் போகும் பின்னணி என்ன?