ஹிண்டன்பர்க் அறிக்கை… அதானி பங்குகள் கடும் சரிவு!

இந்தியா

வாரத்தின் தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் சரிவை கண்ட உலகச் சந்தைகள் கடந்த வார இறுதியில் ஓரளவு இழப்புகளை மீட்டெடுத்தன. உலகளாவிய பலவீனத்தின் மத்தியில் கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சுமார் 1.5% பலவீனமாக முடிவடைந்தது. சென்செக்ஸ் 819.69 புள்ளிகள் உயர்ந்து 79,705.91 புள்ளியிலும், நிஃப்டி 250.50 உயர்ந்து 24,367.50 முடிந்து வரத்தகத்தை நிறைவு செய்தது.

கடந்த வாரத்தில் சுமார் 10 ஆயிரம் கோடி (1.3 Billion Dollar) மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறி உள்ளனர்.

இந்த வாரத்தில், வோடபோன் ஐடியா, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோ, நைக்கா, எச்ஏஎல் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட 85 நிறுவனங்கள் முதலாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.

ஆகஸ்ட் 12 திங்கள்கிழமை AIA Engineering, Balrampur Chini Mills, Borosil Renewables, Campus Activewear, Cera Sanitaryware, DOMS Industries, Happiest Minds Technologies, Hindustan Copper, Housing & Urban Development Corporation (HUDCO), Indian Railway Finance Corporation, Ingersoll-Rand (India), ITI, Natco Pharma, National Aluminium Company, NMDC, Olectra Greentech, Rashtriya Chemicals and Fertilizers, RattanIndia Enterprises, Sunteck Realty, Usha Martin, Vodafone Idea, Voltas நிறுவனங்கள் முதலாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் எட்டு புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதால், ரயில்வே பங்குகள் திங்கள்கிழமை கவனம் செலுத்தும் என்று கணிக்கப்படுகிறது. சுமார் ரூ.24,657 கோடி மதிப்பிலான இந்த ரயில்வே திட்டங்கள் ஏழு மாநிலங்களின் 14 மாவட்டங்களை உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்த விவகாரத்தில் செபி மற்றும் நீதிமன்றங்கள் அதானிக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை என்கிற கேள்வியுடன் அதானி குழுமம் மற்றும் செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் நேரடி குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது.

இதன் காரணமாக இன்று பங்கு சந்தை ரத்தக்களரியாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் ஏழு சதவிகிதம் குறைந்துள்ளது. அந்த பங்குகளின் விளைவுகள் காரணமாக சங்கிலி விளைவு போல மற்ற பங்குகளின் மதிப்பும் சரிய வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

செபி தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இந்திய மூலதனச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாத சூழலை உருவாக்கும் என்று இந்திய பரஸ்பர நிதிகள் சங்கம் (AMFI) தெரிவித்துள்ளது.

உலக பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டாலும். ஹிட்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமாக மிகவும் பரபரப்பான சூழலில் இன்று திங்கட்கிழமை காலை முதல் அமர்வில் சென்செக்ஸ் 375 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. ஹிண்டன்பர்க் அறிக்கை தாக்கம் காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் 5% வரை சரிந்தன. அதானி என்டெர்பிரைசஸ் 3.90%, அதானி போர்ட் 2.92%, அதானி கிரீன் 4.04%, அதானி பவர் 5.4% வரை சரிவை கண்டு வருகிறது.

திங்கள்கிழமை இன்று PATANJALI,Grasim, NBCC, Alkem, Sun TV, Berger Paints, Bajaj Consumer உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது.

மணியன் கலியமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசியல் என்ட்ரி… விஜய்க்கு கனிமொழி சொன்ன அட்வைஸ்!

மலையாள படத்தில் பாரதிராஜா… ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *