இமாச்சல் தேர்தல் : மாற்றம் ஏற்படுமா?
இமாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (டிசம்பர் 8) எண்ணப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி 68 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மையைப் பெற 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
1985-ஆம் ஆண்டிற்குப் பிறகு இமாச்சலப் பிரதேசத்தில் எந்த ஒரு ஆளும் கட்சியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில்லை. மாறி மாறி தான் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 21 இடங்களை பிடித்து தோல்வியடைந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் குஜராத்தை போன்று இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறுகின்றன.
அதன்படி 1985-க்கு பிறகு இமாச்சலப் பிரதேச தேர்தல் வரலாற்றில் மாற்றம் ஏற்படுமா என இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை 59 பகுதிகளில் 68 மையங்களில் நடைபெறும் என்று மாநில தேர்தல் அதிகாரி மனீஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் மொத்தம் 76.44 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்
டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி