ஹைதராபாத், பெங்களூரு, சென்னை நகரங்களை 2 மணி நேரம் 20 நிமிடத்தில் கடக்கும் வகையில் புதிய ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் பெரிய நகரங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களை முக்கோண ரயில் பாதை வழியாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல 6 மணி நேரமும் ஹைதராபாத் செல்ல 10 மணி நேரமும் பிடிக்கிறது. சென்னையில் இருந்து ஹைதராபாத் 705 கி.மீ தொலைவில் உள்ளது. ஹைதராபாத் – பெங்களூருவுக்கு 626 கி.மீ உள்ளது. இந்த நகரங்களை இணைக்க தனியாக புல்லட் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த பாதையில் ஹைதராபாத்தில் இருந்து 2 மணி நேரத்தில் பெங்களூருவுக்கு சென்று விட முடியும். அங்கிருந்து, 20 நிமிடத்தில் சென்னைக்கு வந்து விட முடியும். விமானத்தில் 1.20 மணி நேரத்தில் சென்று விட முடியும். முன்னதாகவே விமான நிலையத்துக்கு சென்று காத்திருப்பதை எல்லாம் சேர்த்தால் 2 அல்லது 3 மணி நேரம் பிடிக்கிறது.
இது தொடர்பாக Rail India Technical and Economic Services நிறுவனத்திடம் ஆய்வு செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை 15 ஆண்டுகளில் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. 320 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய புல்லட் ரயில்கள் மட்டுமே இந்த பாதையில் இயக்கப்படும்.