கேபினெட் மீட்டிங்கை பதுங்கி பதுங்கி நடத்திய இஸ்ரேல்… ஈரான் மீது இவ்வளவு அச்சமா?

Published On:

| By Kumaresan M

இஸ்ரேல் – ஈரான் நாடுகள் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் இரு நாட்டு தலைவர்களுமே அச்சத்தில் உள்ளனர். இஸ்ரேல் தாக்குவதால் ஈரான் சுப்ரீம் லீடர் அயோதுல்லா கமேனி மிகுந்த பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடு மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால், இஸ்ரேல் பிரதமருக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  இஸ்ரேல் கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக டெல் அவில் நகரிலுள்ள  பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகத்தில் வைத்து நடைபெறும். இப்போது, ஈரான் படைகளுக்கு அந்த நாட்டு சுப்ரீம் லீடர் இஸ்ரேலை மீண்டும் தாக்க உத்தரவிட்டுள்ளதால், ரகசியமாக வேறு இடத்தில் வைத்து அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்காக, கடைசி கட்டத்தில் இஸ்ரேல் அமைச்சர்களுக்கு மெசேஜ் வழியாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி எடுத்துக் கொண்டு கூட்டத்துக்கு வரக் கூடாது  என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து  அவருக்கு டெபுடியாக இருந்த நயிம் காசீம்  ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். லெபனானில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா தலைவர்களை குறி வைத்து தாக்கி வருவதால், இவர் தனி விமானத்தில் ஈரானுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

ஷூரா கவுன்சில் என்பதுதான் ஹிஸ்புல்லாவின் முக்கிய முடிவுகளை எடுக்கும்  அதிகாரம் படைத்த  அமைப்பு ஆகும்.  இந்த அமைப்பின் தலைவர்தான் ஹிஸ்புல்லாவின் தலைவராக இருப்பார். ஹிஸ்புல்லா நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இந்த ஷூரா கவுன்சிலில்  ஐந்து பிரிவுகள் உள்ளன. இந்த அமைப்பின் துணை செயலாளராக இருந்தவர்தான் நயிம் காசீம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ”இனி இன்னும் கடுமையாக இருக்கும்” : நன்றி கடிதத்தில் தொண்டர்களை அலர்ட் செய்த விஜய்

தீபாவளி போனஸ் : வலியுறுத்திய எடப்பாடி… நிறைவேற்றிய ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel