எல்லா மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம்: மத்திய அரசு முடிவு!

இந்தியா

உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தை ஒட்டி, இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த அக்டோபர் 18ம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இதில், ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற விபத்து கால நெருக்கடியின்போது துரிதமாக செயல்படுவதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று (அக்டோபர் 21) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”சமீபத்தில் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்களின்போது உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 780 மாவட்ட கலெக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேலும் இதற்காக நிலையான வழிகாட்டுதல்களும் தயாரிக்கப்பட்டு விட்டன. இதைப்போல நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 200 அல்லது 300 கி.மீ. தொலைவிலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் திட்டம் இருக்கிறது.

இதுகுறித்து மத்திய போக்குவரத்து அமைச்சகத்துடன் பேசப்பட்டு வருகிறது. சஞ்சீவனி திட்டத்தின் கீழ், ரிஷிகேஷ் எய்ம்ஸ் உதவியுடன் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும். இதன் மூலம் விபத்து அல்லது பிற வகையான அவசரநிலை ஏற்பட்டால் 125 கி.மீ. தூரம் வரை உடனடி நிவாரணம் கிடைக்கும்” என அவர் தெரிவித்தார்.

ஜெ.பிரகாஷ்

“வீண்பழி சுமத்துகிறார்கள்” : சசிகலா வேதனை!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *