வரலாறு காணாத மழை : தவிக்கும் வடமாநில மக்கள்!

Published On:

| By Kavi

வட மாநிலங்களில் இயற்கை ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.

இமாச்சல பிரதேசம், உத்தரக்காண்ட், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடுமையாக மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. நீர் நிலைகள் அருகில் இருக்கும் கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வைரலாகி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

2013ஆம் ஆண்டு உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையால் மண் சரிவு, நீரில் அடித்து செல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த பேரிடர் அப்போது முதல் இப்போது வரை ‘இமயமலை சுனாமி’ என்று அழைக்கப்படுகிறது.

அதுபோன்றதொரு நிலையை தற்போது இமாச்சல பிரதேசம் கண்டிருக்கிறது. மலை பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் திரும்பும் திசையெல்லாம் மண் சரிவு, ஆறுகளில், வெள்ளப்பெருக்கு, இடிந்து விழும் சாலைகள், மரக்கட்டைகள் செம்மண் கலந்து ஓடும் நீர் என மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்புகளால்  மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இமாச்சலில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் மாயமாகியுள்ளனர். 785.51 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக இமாச்சல அரசு தெரிவித்துள்ளது. 29 இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், 39 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் குலுவில் உள்ள பியாஸ் நதியில் பாயும் வெள்ளம் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதில் லாரி ஒன்று அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

https://twitter.com/ANI/status/1678407278087512066

பியாஸ் நதியில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

https://twitter.com/ANI/status/1678405814028042240

காகித கப்பல் போல் சாலைகளில் ஓடும் வெள்ளத்தில் கார்கள் எல்லாம் அடித்து செல்லப்படும் காட்சிகளையும் உள்ளூர் மக்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

https://twitter.com/naidusudhakar/status/1678425853674364930

https://twitter.com/jobinindia/status/1678416661446008836

இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி பகுதியில் ஆற்றின் மீது கட்டப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது,

https://twitter.com/GoHimachal_/status/1678006968965816321

இப்படி இமாச்சல பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மறுபக்கம் தலைநகர் டெல்லி மக்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 153 மிமீ மழை பெய்திருக்கிறது. 1982ஆம் ஆண்டுக்கு பின் இந்த ஜூலையில் தான் ஒரே நாளில் அதிக மழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனையில் நீரின் அளவு அபாயகட்டமான 205.33 மீட்டர் உயரத்தை எட்டியதாக இன்று மாலை டெல்லி பேரிடர் மீட்புத் துறை அறிவித்துள்ளது.  இந்த அளவு இரவு 8 மணியளவில் 205.76 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி பழைய ரயில்வே பாலத்தில் 205.4 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

https://twitter.com/ANI/status/1678422545337401346

ஹரியானா ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து உபரி நீரை தொடர்ந்து திறந்துவிடுவதால், யமுனை ஆற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்று பஞ்சாப் மாநிலமும் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கடும் மழை பெய்து வருகிறது.

வடமாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பிரதமர் மோடி இன்று உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை உறுதி செய்ய உள்ளூர் நிர்வாகங்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் அணிகள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புவி வெப்பமடைதல் காரணமாக காற்றில் அதிக ஈரப்பதம் ஏற்படுகிறது. அந்த காற்றை மலை தடுக்கும்போது அது மழையாக கொட்டுகிறது. மேலடுக்கு சூழற்சி காரணமாகவும் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிரியா

TNPL:நெல்லை அணிக்கு 186 ரன்கள் இலக்கு!

சிறு உணவகங்களில் விலை உயர்வு! அடுத்து பெரிய ஹோட்டல்களிலுமா? 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment