அடர் பனியில் உறைந்த வட மாநிலங்கள்!

இந்தியா

அமெரிக்காவில் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் , இந்தியாவின் வட மாநிலங்களிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நியூயார்க்கில் 27 பேர் உட்பட நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்டோர் பனியால் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க்கை ஒட்டி உள்ள பஃபல்லோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் கார்கள், பேருந்துகள், ஆம்புலன்ஸ்கள், இழுவை வண்டிகள் ஆகியவை பனியால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக டிராக்டரை கொண்டு மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். வாகனங்களுக்குள்ளும், பனிக்கட்டிகளுக்கு அடியிலும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கார் காராக சென்று யாரேனும் மாட்டிக்கொண்டிருக்கிறார்களா என தேடி வருவதாகவும் கூறுகின்றனர்.

நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், நேற்று தனது சொந்த ஊரான பஃபலோவில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்த பனிப்புயல் ஒரு யுகத்துக்கு ஒரு முறை ஏற்படுவது, அதாவது நூற்றாண்டின் பனிப்புயல் என்று கூறியுள்ளார்.

பஃபலோ நயாகரா சர்வதேச விமான நிலையத்தில் 1.25 மீட்டர் உயரத்துக்கு பனிக்கட்டி இருந்ததாகத் தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது.

பூஜ்ஜியத்திற்குக் குறைவான வெப்பநிலை காரணமாக சமீபத்திய நாட்களில் அமெரிக்கா முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. ஜம்மு நகரில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் இருந்தது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


டெல்லியில் அடர் மூடுபனி காரணமாக முன்செல்லும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் இன்று காலை 7 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் அடர் பனி பெய்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு அடர் மற்றும் மிக அடர் பனி பெய்யும் நிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்திலும் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக உள்ளது. கடும் குளிரில் நடுங்கும் மக்கள் காலையில் தீ மூட்டி குளிர்காயும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘ஹரியானாவின் அம்பாலா மற்றும் ஹிஸ்சார் பகுதியில் 50 மீட்டர் தொலைக்கு அப்பால் எதுவும் தெரியவில்லை. ராஜஸ்தானின் கங்காநகர் பகுதியில் 25மீ தொலைவுக்கு அப்பாலும், உத்தரப் பிரதேஷ் மாநிலம் ரெபெரேலி பகுதியில் 25 மீ தொலைவுக்கு அப்பாலும் எதுவும் தெரிவில்லை’ என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

சென்னையிலும் இன்று காலை அதிக பனிப்பொழிவு இருந்தது. காலை 6மணி வரையிலுமே இருள் சூழ்ந்தது போல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

ஐபிஎல் ஏலம்: நொந்து போன சந்தீப் ஷர்மா

குமரி எம்பி சீட்: அண்ணாமலைக்கு எதிராக பொன்னார் நடத்தும் டெல்லி யுத்தம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *