டெல்லியில் தொடரும் வெப்ப அலை: ஒரே நாளில் 17 பேர் பலி!

இந்தியா

நாட்டின் வடமாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் வெப்ப அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து ஒரே நாளில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக, அதிகரித்து வரும் வெப்ப அலையின் தாக்கத்திற்கு மக்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். வெப்ப அலை மற்றும் வெப்பம் தொடர்புடைய பாதிப்புகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் டெல்லி ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் ஆகிய மருத்துவமனைகளில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். வெப்ப தாக்கம் சார்ந்த பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்படி, சப்தர்ஜங் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 33 நோயாளிகள் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 13 பேர் மரணம் அடைந்து விட்டனர்.

ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில், வெப்ப தாக்கத்திற்கு ஆளாகி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 22 நோயாளிகளில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டெல்லியின் முக்கிய தகன பகுதியான நிகாம்போத் காட் பகுதியில், தகனம் செய்யப்படும் உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இதுபற்றி பேசியுள்ள மிக பழமையான மற்றும் பெரிய தகன பகுதியான நிகாம்போத் காட் சஞ்சலான் சமிதியின் பொது செயலாளர் சுமன் குப்தா,

“நேற்று  முன்தினம் (ஜூன் 19) ஒரு நாளில் 142 உடல்கள் தகனத்திற்கு கொண்டு வரப்பட்டன. இது தினசரி சராசரியான 50 முதல் 60 உடல்கள் என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 136 சதவிகிதம் அதிகம்.

நேற்று (ஜூன் 20) காலையில் இருந்து 35 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இன்று (ஜூன் 21) இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும்” என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

ஹெல்த் டிப்ஸ்: மூக்கில் ரத்தம்… வேண்டாமே பதற்றம்!

IND vs AFG: சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியா அபார வெற்றி!

கிச்சன் கீர்த்தனா : ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட்

டிஜிட்டல் திண்ணை: கள்ளக்குறிச்சி…. மூடி மறைக்கப்பட்ட முதல் மரணம்? மூன்று நெருக்கடிகள்… கோபத்தில் ஸ்டாலின்

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0