ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு : ஏ.எஸ்.ஐ கைது

அரசு நிகழ்ச்சிக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சரை கூடுதல் எஸ்ஐ சுட்டதில் படுகாயம் அடைந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்டத்தில் பிரஜ்ராஜ் நகர் என்ற பகுதிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சென்றிருந்தார்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து காரில் இருந்து இறங்கிய அமைச்சர் மீது, அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 5 ரவுண்டுகள் சுடப்பட்டதில் அமைச்சர் நபாதாஸின் நெஞ்சுப்பகுதியில் சரமாரியாக தோட்டாக்கள் பாய்ந்தன. அவருடன் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் அங்கிருந்த இளைஞர் ஒருவரும் குண்டு காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ் உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கூடுதல் உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்று தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பிராஜ்ராஜ் நகர் காவல் உயர் அதிகாரி குப்தேஸ்வர் கூறுகையில், அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கூடுதல் எஸ்.ஐ கோபால் தாஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். எனினும் காவல் அதிகாரி ஏன் இத்தகைய நடவடிக்கையை எடுத்தார் என்பதற்கான சரியான காரணத்தை என்னால் சொல்ல முடியவில்லை” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்து அமைச்சர் நபாதாஸ் ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

எமெர்ஜென்சி எக்சிட் திறப்பு: பயணி மீது வழக்குப் பதிவு!

அதிமுக பிரச்சனை: நம்பிக்கை வைக்கும் முத்துசாமி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts