ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரையும் கொன்றதா இஸ்ரேல்? நிலவரம் என்ன?

Published On:

| By Kumaresan M

லெபனானில் செப்டம்பர்  27 இரவு தெற்கு பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் போர்  விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அவர் பதுங்கியிருந்த பங்கர் மீது 60 முதல் 80 டன் வெடிகுண்டுகளை வீசி இஸ்ரேல் அழித்தது.

ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டாலும், அதற்கு அத்தனை ஆதரவையும் ஈரான் நாடுதான் அளித்து வருகிறது.  அந்த ஈரானில் இருந்துதான் ஸ்பை இஸ்ரேலுக்கு ஹசன் நஸ்ருல்லா இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்துள்ளார்.

இதையடுத்து,கச்சிதமாக காரியத்தை முடித்த இஸ்ரேல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உலகத்தை விட்டு அகற்றப்பட்டார் என்று எக்ஸ் பதிவு வழியாக தெரிவித்தது. .

ஹசன் நஸ்ருல்லாவின் மறைவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா அமைப்பின் எக்ஸிகியூடிவ் கவுன்சில் தலைவராக இருந்த ஹாசீம் சையாப்தீன் அந்த இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பெய்ருட் நகரின் தையிப் என்ற பகுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் ஹாசீம் சையாப்தீனும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியதில் ஹாசீம் சையாப்தீன் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சில செய்தி நிறுவனங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. ஆனால், இஸ்ரேல் , ஹிஸ்புல்லா  அமைப்பு இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹசன் நஸ்ரல்லாவின் இறுதி ஊர்வலம்  அக்டோபர் 4 ஆம் தேதியான இன்று லெபனானில் நடைபெறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

”சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்”: உதயநிதியை மறைமுகமாக விமர்சித்த பவன் கல்யாண்

நெருங்கும் தீபாவளி… பட்டாசு கடை அமைக்க என்ன செய்ய வேண்டும்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel