போலி ரசீது ரூ.3.22 கோடி சுருட்டிய கான்ஸ்டபிள்கள்!

இந்தியா

அரியானாவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள்கள் போலி ரசீது வழியே ரூ.3.22 கோடி சுருட்டிய விவரம் அம்பலமாகியுள்ளது.

அரியானாவில் போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ஜனக். இவரிடம் போலீஸ் சூப்பிரண்டு லோகேந்திர சிங், நடப்பு ஆண்டு மே மாதத்தில் விதிக்கப்பட்ட வாகனங்களுக்கான அபராத தொகை பற்றிய விவரத்தைக் கேட்டிருக்கிறார். அவர் அளித்த விவரங்களை ஆய்வு செய்ததில், வசூலித்த அபராத தொகைக்கும், வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்கும் அதிக வித்தியாசம் இருந்தது தெரிய வந்தது.

இதுபற்றி லோகேந்திர சிங் விசாரணைக்கு உத்தரவிட்டதில், மோசடி ஆவணங்களைப் பயன்படுத்தியும், போலியான ரசீதுகளையும் கொண்டு ரூ.3 கோடியே 22 லட்சத்து 97,150 வரை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில், கான்ஸ்டபிள் ஜனக் உடன் சேர்ந்து ஓம்பீர் என்ற மற்றொரு கான்ஸ்டபிளும் அரசு வருவாயை தவறாகப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்தத் தொகையை அதிகாரபூர்வ வங்கிக் கணக்குகளில் செலுத்துவதற்கு பதிலாக அவர்கள் தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கான்ஸ்டபிள் ஜனக் அவரது பணியின்போது மொத்தம் ரூ.3.22 கோடி தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை. இதேபோன்று, கான்ஸ்டபிள் ஓம்பீர் ரூ.12,700 தொகையை அவரது பணி காலத்தின்போது வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவாகி உள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான தலைமை கான்ஸ்டபிள் ஜனக் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஓம்பீர் தலைமறைவாகியுள்ளார்.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: ஃப்ரூட்ஸ் டிலைட்

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *