இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி உறுதியாக உள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்க இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
நாராயண மூர்த்தியின் கருத்துக்கள் பல்வேறு தொழில்களில் உள்ள முக்கிய நபர்களிடமிருந்து பலவிதமான எதிர்வினைகளைப் பெற்றன. சிலர் ஆதரவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு நாராயண மூர்த்தி அளித்துள்ள பேட்டியில், “1981ல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவியபோது மணிக்கணக்கில் வேலை செய்வேன். தினசரி காலையில் 6.20 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்றுவிடுவேன். இரவு 8.30 மணிக்குத்தான் அலுவலகத்திலிருந்து கிளம்புவேன். வாரத்துக்கு 6 நாள் வேலைக்குச் செல்வேன். இன்று செழிப்பாக உள்ள ஒவ்வொரு நாடும் கடின உழைப்பின் மூலம் உயர்ந்தவை.
வறுமையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கடின உழைப்புதான் என என் பெற்றோர்கள் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே எனக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
எனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையில், நான் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்திருக்கிறேன். அதுவும் 1994 வரை நான் வாரத்திற்குக் குறைந்தது 85 முதல் 90 மணிநேரம் வேலை செய்வேன். எனது கடின உழைப்பு வீண் போகவில்லை” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வெள்ள நிவாரண தொகை : யார் யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!
சென்னைக்கு ரூ.4000 கோடி: எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் சவால்!