மீண்டும் எச்.எல்.எப்.டி.-42 விமான மாதிரி வடிவத்தின் வால் பகுதியில் அனுமனின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படையில் விமானிகளுக்கு அதிநவீன பயிற்சி அளிக்க எச்.ஏ.எல் சார்பில் 5 ஆம் தலைமுறை ரகத்தை சேர்ந்த எச்.எல்.எப்.டி.-42 சூப்பர்சோனிக் பயிற்சி விமானத்தை எச் ஏ எல் உருவாக்கி வருகிறது.
அதன் மாதிரியை பெங்களூருவில் நடைபெற்று வரும் சர்வதேச விமான கண்காட்சியில் உள்ள எச்.ஏ.எல் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆம் தேதி பிரதமர் மோடி இந்த கண்காட்சியை துவக்கி வைத்த முதல் நாளிலேயே எச்.எல்.எப்.டி.-42 விமான மாதிரியின் வால் பகுதியில் அனுமனின் உருவப்படம் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தேசிய அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் எச்.ஏ.எல் அதிகாரிகள் உடனடியாக அதை அகற்றினர்.
இந்நிலையில் இன்று விமான கண்காட்சி கடைசி நாளில் மீண்டும் எச்.எல்.எப்.டி.-42 விமான மாதிரியின் வால் பகுதியில் அனுமனின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்கட்சிகள் என பலதரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இராணுவ கட்டமைப்பில் மதம் சார்ந்த குறியீட்டை நுழைப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என பலர் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கலை.ரா
ரேஷன் பொருட்கள் பதுக்கல்: புகார் எண் அறிவிப்பு!
மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!